Tuesday, 2 June 2026

 

முதலமைச்சர் தம்பி ஜோசப் விஜய் கவனத்திற்கும்..

அனுப்புனர் :

 

சுப்ரபாரதிமணியன்

எழுத்தாளர் ..

8/2635 பாண்டியன் நகர்

திருப்பூர் 2 ( 9486101003)

 

 

 

பெறுநர்

போக்குவரத்து துறை அமைச்சர்

வட்டாரப் போக்குவரத்து துறை இயக்குனர்

தமிழக முதல்வர் இயக்குனர்

இயக்குனர்,  தமிழ் வளர்ச்சித் துறை சென்னை

தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர்.

0

வணக்கம்

31/5/26 ஞாயிறு அன்று காலையில் சாகித்திய  அகாடமி சார்பாக            ” தமிழ் நாவல்களில் எதார்த்தவாதம் “  என்ற கருத்தரங்கு தலைமையேற்று நடத்தி விட்டு மாலை கோவையிலிருந்து ஐந்து முப்பது மணி அளவில் திருப்பூருக்கு திரும்பினேன்.அரசுப்பேருந்தில்

   அரசுப் போக்குவரத்தில் பயணம் செய்வதற்கான விருது பெற்ற எழுத்தாளர்/தமிழ் அறிஞர் என்ற விதத்தில் எனக்கு பயன் அட்டை உள்ளது. பல ஆண்டுகளாக அதை நான் பயன்படுத்திக் கொள்கிறேன் இந்த ஆண்டும் ஏப்ரலில் அதை புதுப்பித்து இருக்கிறேன். இந்த முறை கணினியில் அதை பதிவிட்டு தந்திருந்தார்கள் முதல் முறையாக.

 

  அரசு பேருந்தின் நடத்துனர் இடம் என் பயண அட்டையை கொடுத்தபோது அவர் முதலில் இதெல்லாம் செல்லாது என்றார் பிறகு நான் விளக்கிச் சொன்ன போது இதன் ஜெராக்ஸ்

கொடுங்கள் என்றார். நான் பல ஆண்டுகளாக பயணம் செய்கிறேன் யாரும் ஜெராக்ஸ்  கேட்பதில்லை அடையாள அட்டையில் உள்ள எண்ணைப் பதிவு செய்து கொண்டு ஜீரோ பில்லிங் வரும் அந்த டிக்கெட்டை தருவார்கள் என்று சொன்னேன் இல்லை அவர் ஒத்துக் கொள்ள முடியாது என்றார் ஜெராக்ஸ் தாருங்கள் பரிசீலிக்கலாம் என்றார். வழக்கமாக ஜெராக்ஸ் தருகிற அணுகுமுறை இல்லை என்று சொன்னேன் ஒத்துக் கொள்ளவில்லை. நீங்கள் பணம் கொடுத்து டிக்கெட் வாங்குங்கள் என்று திரும்பத் திரும்ப வற்புறுத்தினார். ஓகே நான் பணம் கொடுக்க தயாராக இருக்கிறேன். உங்கள் பெயரை சொல்லுங்கள் நாங்கள் உங்கள் மீது புகார் சொல்லிக் கொள்கிறேன். வழக்கு பதிவிடுகிறேன் என்று சொன்னேன். ஆனால் அவர் பெயரை சொல்ல மறுத்துவிட்டார். அவர்  சட்டையில் இருந்த ”பேச் “சில் அவருடைய பெயர் இருந்தது. ஆனால் என் கண் பார்வை அவ்வளவு துல்லியமாக இல்லை .அவர் பெயரை கண்டு கொள்ள முடியவில்லை. இடையில் நான்கு பயணிகள் தூர இடைவெளி இருந்தது. பிறகு அவர் ஒரு நிலையில் நீங்கள் வந்து டிக்கெட் வாங்க வேண்டும்,  இல்லை என்றால் ஜெராக்ஸ் தர வேண்டும் இல்லை என்றால் இறங்குங்கள் என்றார். பேருந்து பயணத்தில் இருப்பவர்கள் எல்லாம் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தார்கள். இதுவரை யாரும் ஜெராக்ஸ் கேட்பதில்லை உங்களுக்கு அப்படி தேவையாக இருந்தால் திருப்பூர் புதிய பேருந்து நிலையத்தில் இறங்கி உங்களுக்கு ஜெராக்ஸ் எடுத்து தருகிறேன் என்றேன். அவர் அதெல்லாம் முடியாது நீங்கள் பணம் கொடுத்து டிக்கெட் வாங்குங்கள் அல்லது இறங்குங்கள் என்று சொன்னார். இது சர்ச்சையாகி வெடித்துக் கொண்டிருந்தது. பலர் எனக்கு ஆதரவாகப் பேசியதையும் அவர் கண்டித்தார்,  அவர் எதையும் கவனிப்பதாகத் தெரியவில்லை பணம் கொடுங்கள் இல்லை என்றால் ஜெராக்ஸ் கொடுங்கள் என்பது தான் அவர் வாதம்.. நான் பணம் கொடுக்கிறேன். டிக்கெட் வாங்குகிறேன்.  உங்கள் பெயரை சொல்லுங்கள் என்றேன்
. நீங்கள் உங்கள் கைவசம் இருக்கிற சாதனத்தில் இந்த அடையாள அட்டையின் எண்ணைப் பதிவிட்டால் ஜீரோ பில்லிங் வரும். அதை எனக்கு கொடுங்கள் அதான் முறையானது என்றேன் அவர் ஒத்துக் கொள்ளவில்லை

 நான் தமிழ் வளர்ச்சித் துறை தமிழக அரசு போக்குவரத்திற்கு இப்படி ஒவ்வொரு எழுத்தாளர்களுக்கும் தமிழறிஞர்களுக்கும் ஆண்டுதோறும் 16, 000 ரூபாய் இதற்காகச் செலுத்துகிறது என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆகவே நீங்கள் நினைப்பது போல இது ஓசி பயணம் அல்ல எழுத்தாளர்களை  கவுரவிப்பதற்காக தந்த அட்டை என்று விபரமாகச் சொன்னேன். அவர் சர்ச்சை செய்து கொண்டே இருந்தார். ஒரு கணத்தில் நான் பொறுமை இந்து விட்டேன். ஏதாவது வார்த்தைகள் மீறினால் சிரமமாகிவிடும் என்று ரொம்ப ஜாக்கிரதையாக இருந்தேன் அவர் கத்தி ஓய்ந்தார்.

பிறகு அவர் கைவசம் இருந்த சாதனத்தில் அந்த பயண அடையாள எண்ணைப் பதிவிட்டு ஜீரோ பில்லிங் கொடுத்து நகர்ந்துவிட்டார் நான் முன்பே இதை சொன்னேன். நீங்க கேட்கவில்லை என்றாலும் பின்னர்  ஒரு பதில் எதுவும் சொல்லவில்லை. என் வயது 72 . மூத்தோர்களை சரியாகக் கையாளுங்கள் என்றேன். பதிலில்லை.

 நான் என்னுடைய அனுபவத்தை புகாராக அளிக்க போகிறேன் என்று சொன்னேன். யார் இடம் வேண்டுமானாலும் நீங்கள் உங்கள் புகாரை தந்து கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டார் அந்த வண்டியின் என்று மட்டும் நான் குறித்துக் கொண்டேன்.

தநா 39 . நா 0266  . கோவை காந்திபுரத்தில் இருந்து மாலை 5.30 மணிக்குக் கிளம்பி 7 மணிக்கு திருப்பூர் வந்து சேர்ந்த பேருந்து அது.  என் பயண அடையாள அட்டை எண்.2012026040900430

எழுத்தாளர்கள் இதுபோன்று பயணம் செய்யும்போது பெரும்பான்மையான நடத்துனர்கள் இது ஏதோ ஓசி பயணம் என்று நினைக்கிறார்கள். அது இல்லை என்று திரும்பத் திரும்ப சொல்ல வேண்டியிருக்கிறது. போக்குவரத்து துறை அதிகாரிகள் நடத்துனர்களுக்கு சரியாக அறிவுரை கூறி இதற்காக ஜீரோ பில்லிங் தரவேண்டிய அவசியமும் இது எழுத்தாளர்களையும் தமிழறிஞர்களையும் கௌரவப்படுத்த ஒரு நிகழ்வு என்பதையும் அறிவுறுத்தலாக சொல்ல வேண்டும்.அவர்களின் அணுகுமுறை  மோசமாக இருக்கிறது

 இதுபோல் தமிழறிஞர்களை இடையில் பேருந்தை விட்டு இறக்கியும் அல்லது அவர்கள் கேட்ட நிறுத்தத்தில் நிறுத்தாமல் வேறு இடத்தில் திறுத்தியதாலும் முன்னர் தொடரப்பட்ட வழக்குகளில் பல ஆயிரக்கணக்கான  ரூபாய்க்கு நஷ்ட ஈட்டை  அரசு போக்குவரத்து துறை அளித்திருக்கிறது என்பதை நானும் அறிந்திருக்கிறேன்.

 எனவே போக்குவரத்து துறை சார்ந்த அதிகாரிகள் நடத்துனர்களுக்கு இதுசார்ந்து சரியான அறிவுரைகளையும் விபரங்களையும் தர வேண்டும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்

 

 இப்படிக்கு

 சுப்ரபாரதி மணியன் எழுத்தாளர்

(ரா.ப.சுப்ரமணியன்) 1/6/26

 

Subrabharathimanian,  Tiruppur

 

0 சுப்ர பாரதி மணியன்  :  25/10/1955 . /  MSc ( Maths)

 வெளியாகி உள்ள நூல்கள் :

 135 நூல்கள்

 / 27 நாவல்கள் / 19 சிறுகதை தொகுப்புகள் /                    3  குறுநாவல்கள் தொகுப்புகள் / 25 கட்டுரைத் தொகுப்புகள்/,  வெளிநாட்டு பயண அனுபவம் நூல்கள் மற்றும் திரைப்பட நூல்கள்.( 100வது நூல் : சிலுவை நாவல் 1000 பக்கங்கள். ரூ1200 )

 

 பரிசுகள் :

0 சிறந்த சிறுகதைக்கான இந்திய ஜனாதிபதி வழங்கிய கதா பரிசு

0 ”சாயத்திரை “ நாவலுக்காக தமிழக அரசின் சிறந்த நாவலுக்கான பரிசு  1998

0 தமிழக அரசின் தமிழ்ச்செம்மல் விருது 2016

0 தமிழக அரசின்  மொழி பெயர்ப்பாளர்   விருது 2022

 

0 குமுதம் ஏர் இந்தியா நடத்திய இலக்கியப் போட்டியில் சிறந்த குறுநாவலுக்கான பரிசு பெற்று இங்கிலாந்து ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்று பயணம்

0 எழுத்து அறக்கட்டளையின் சிறந்த நாவல் விருது ஒரு லட்சம் ரூபாய் 2021

0 சார்ஜா புத்தகக் கண்காட்சியின் புக்கிஷ் விருது 2021

0 கோவை கஸ்தூரி சீனிவாச அறக்கட்டளையின் சிறந்த நாவலுக்கான பரிசு ” பிணங்களின்  முகங்கள்”  நாவலுக்காக

0 ஜெயந்தன் நினைவு பரிசு சிறந்த நாவலுக்காக நீர் துளிகள் 0 சின்னப்ப பாரதி இலக்கிய விருது

0 திசையட்டும் நல்லி மொழிபெயர்ப்பு விருது

 எஸ் ஆர் வி திருச்சி மற்றும் பாவை ராசிபுரம்  நிறுவனங்களின் இலக்கிய விருதுகள் 2022., 2023

0      தமிழக அரசின் மொழிபெயர்ப்பாளர் விருது ரூபாய் 2 லட்சம் தொகையுடன்

1      0 சென்னை தமிழ்ப்பேராயம் புதுமைப்பித்தன் விருது சிலுவை நாவலுக்காக ரூபாய் 1 லட்சம் தொகையுடன்

0 பொறுப்பு:

0 சாகித்ய அகடமி ஆலோசனைக் குழு உறுப்பினர்    2008 - 12

0  தென்னிந்திய திரைப்படசங்கங்களின் கூட்டமைப்ப்பு பிராந்திய குழு உறுப்பினர்

 

மொழிபெயர்ப்பு:

0 ” சாயத்திரை “ நாவல் ஆங்கிலத்திலும், ஹிந்தியில் மலையாளம் கன்னடம் வங்காளத்திலும் மொழி பெயர்ப்பு உள்ளது

0 ஹிந்தியில் ஐந்து  நாவல்களும்

மலையாளத்தில் ஐந்து நாவல்களும் மொழிபெயர்ப்பாகி வெளியாகி உள்ளன

 ஆங்கிலத்தில் 20 நூல்கள் வெளியாகி இருக்கின்றன மொழிபெயர்ப்பில் பல இந்திய மொழிகளிலும்.

0 படைப்புகள் பல பல்கலைக்கிடங்களில் பாடநூல் உள்ளன                    0 மலையாளம் தெலுங்கு ஹிந்தி ஆங்கிலம் மற்றும் இந்திய  மற்றும் ஹங்கேரியன் மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன

 

 சுற்றுச்சூழல் நூல்கள் :

 நாவல்கள் :

0 சாயத் திரை, நீர்த்ர்த்துளி, புத்துமண்

0 கட்டுரைத் தொகுப்புகள் :  

தண்ணீர் யுத்தம்,  சூழல் அறம், நீர்ப்பாலை,  மேக வெடிப்பு,  சிவப்புப்பட்டியல், மறைந்து வரும் மரங்கள் , மூன்றாம் உலகப்போர் , பூமிக்கு மனிதன் தலைவனா,  பூமிக்குத் தீ வைத்தோம்,  பசுமை அரசியல் உட்பட  12 கட்டுரைத் தொகுப்புகள்

 

இதழியல் :

0 கனவு இலக்கியக் காலாண்டு  இதழை  38 ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.

0  கனவு திரைப்பட இயக்கம்,,                                                                  

0    தாய் தமிழ் பள்ளி பாண்டியன் நகர் திருப்பூர் உடன் இணைந்து செயல்பாடு  30  ஆண்டுகளாய்.

 

 திரைநாவல்கள் :

0 திரைக்கதை நூல்கள் 9 வெளியிட்டுள்ளார் . அவற்றில்  70  திரைக்கதைகள் உள்ளன.

திரைநாவல் என்ற புதிய நாவல் முயற்சிகளில் 10 நாவல்களை எழுதியுள்ளார்.

 

குறும்படங்கள்:

0

 சுப்ரபாரதி மணியன் இயக்கிய குறும்படம்  ” நாணல் “( அவரின் பாதுகாப்பு என்ற ஆனந்தவிகடன் சிறுகதை )

  இவரின் கதைகள் திருவிழா , சோத்துப்பொட்டலம், சுமங்கலி மாற்றம் உட்பட 10 குறும்படங்களாக  வெளியாகி  இருக்கிறன..                  ” இன்று நேற்று நாளை “, அயலான் “ இயக்குனர் ஆர். இரவிக்குமர்ர் இயக்கிய சுமங்கலி உட்பட பல இயக்குனர்களின் இயக்கத்தில்  குறும்படங்கள் வெளியாகியுள்ளன.

 

வெளிநாட்டு பயணங்கள்:

 

0 : இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, சிங்கப்பூர், மலேசியா இந்தோனேசியா, தாய்லாந்து, பங்களாதேஷ், இலங்கை, துபாய்

சார்ஜா , இஸ்ரேல் பாலஸ்தீனம்,  ஜோர்டான், வியட்நாம், இலங்கை, ,எகிப்து

 

 

 

 

 

 

அன்புடையீர்.. வணக்கம்

ஜீன் 5 உலகச் சுற்றுச்சூழல் தினம்.

 

அதையொட்டி பள்ளி மாணவர்களுக்கான சுற்றுச்சூழல் பற்றிய ஏ4 அளவிலான ஓவியங்களை திருப்பூர் கனவு  இலக்கிய வட்டம் எதிர்பார்க்கிறது.

சிறந்த 25  ஓவியங்களுக்குப் பரிசும் சான்றிதழும் வழங்கப்படும்.

ஜீன் 20க்குள் ஓவியங்களைச் சமர்ப்பியுங்கள்.

 

( 20/6/26 க்குப்பின் தகவல் தெரிவித்தால் வந்து ஓவியங்கள் பெற்றுக்கொள்ளப்படும். அல்லது கொடுத்து அனுப்பிவைக்கவும்)

 

அன்புடன்

சுப்ரபாரதிமணியன், 9486101003

8/2635 பாண்டியன் நகர்  திருப்பூர்

கனவு இலக்கிய வட்டம் நாற்பதாம் ஆண்டில் இலக்கியச் செயல்பாட்டில் தொடர்கிறது.

 

 

 

Thursday, 30 August 2018

ரேகை :சுப்ரபாரதி மணியனின் புதிய நாவல்
காலம் உருவாக்கிய எழுத்து :  இரா.  முருகவேள்
---------------------------------------------------------------------------------
இயல்புவாத எழுத்து இரண்டு வகையானது. வாழ்க்கையை அப்படியே பிரதிபலிப்பது ஒரு வகை. இந்த வகையான எழுத்தில் பெரும்பாலும் தனிநபர் துயரங்களும், உறவுச்சிக்கல்களும், சம்பவங்களும் மட்டுமே இடம்பெறும். ஒரு புகைப்படத்தைப் போல குறிப்பிட்ட சூழலைப் பிரதிபலிக்கக் கூடியது இந்த எழுத்து. குறிப்பிட்ட சம்பவங்களை விவரிப்பதை மட்டுமே தனது நோக்கமாகக் கொண்டு இருப்பதால் இந்த எழுத்தாளர்கள் மென்மேலும் தங்கள் எழுத்தின் நயத்திலும் நுட்பங்களிலும் கவனம் செலுத்துகின்றனர். மொழியை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் செல்வதில் இந்த எழுத்து முக்கிய பங்காற்றுகிறது.

   இன்னொரு வகையான இயல்புவாத எழுத்து என்பது நிகழ்வுகளை அரசியல் பொருளாதாரப் பின்னணில் ஆராயக் கூடியது. உள்ளதை உள்ளபடி கூறுவது என்பதைக் கடந்து எழுத்தாளர் காரணங்களைத் தேடிச் செல்கிறார். எடுத்துக்கொண்ட காலம், புவியியல் அமைப்பு, பங்குபெறும் மனிதர்களின் மனக்கட்டமைப்பு ஆகியவற்றை ஊருடுருவிப் பார்த்து தனது முடிவுகளை இலக்கியமாக முன்வைக்கிறார். இங்கே நிகழ்வுகள் தனித் தீவுகளாகக் கருதப்படுவதில்லை. சமூக வளர்ச்சிப் போக்கில் அங்கமாக, பின்விளைவாகக் கருதப் படுகின்றன. மனித உணர்வும் கூட ஒரு குறிப்பிட்ட சூழலின் வி்ளைபொருளாக இருக்கிறது. ஒரு கலவரச்சூழலில் நாம அடையும் உணர்வுகளை அனுமதி பெற்று நடத்தும் ஆர்ப்பாட்டத்திலோ, உண்ணாவிரதத்திலோ அடைவது சாத்தியமில்லை. எனவே உணர்வுகள் சூழலில் இருந்து விளைந்து வருபவை. இந்த வகையான எழுத்தில் தனிமனிதனை விட சமூகச்சூழலே முக்கியத்துவம் பெறுகிறது. சமூக வரலாற்றுக்குப் பொக்கிஷமாக இருக்கக் கூடியவை இந்த எழுத்துக்கள்.
   சுப்ரபாரதி மணியன் இந்த வகையான எழுத்துக்களை தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர்களின் ஒருவர். நவீன ஆலைகளைக் கோவில்களாகப் பார்த்தது ஒரு தரப்பு. உரிமைப் போராட்டங்களுக்கான களமாகப் பார்த்தது இன்னொரு தரப்பு. இரண்டையும் கடந்து அது இந்த மண்ணின் மீது ஏற்படுத்திய பாதிப்பை முதலில் உணர்ந்து கொண்ட நுண்ணுணர்வு கொண்ட எழுத்தாளர் சுப்ரபாரதி மணியன். இன்று சுற்றுச்சூழல் பார்வை கொண்ட புனைவுகளும், அபுனைவுகளும் தமிழிலக்கியத்தில் மிக முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளன. ஆனால் இந்த விழிப்புணர்வு வருவதற்கு முன்பே அவரின்  ” சாயத்திரை  “ நாவல் வந்தது. பின்பு நொய்யல் ஆறு சந்திக்க இருந்த மாபெரும் அழிவையும், ஓரத்துப்பாளையை அமில அணை உருவாக இருந்ததையும் குறித்த முன்னுணர்வை அளித்தது அந்த நாவல்.
   அதன் பின்பு தொடர்ச்சியாக திருப்பூர் பிரதேசத்தின் சமூகப் பின்னணியை மிக ஆழமாக தனது எழுத்துகளின் பிரதிபலித்து வருகிறார் சுப்ரபாரதி மணியன்.
   அராஜமான முதலாளித்துவ உற்பத்தி உருவாக்கிய நகரம் திருப்பூர். யார் வேண்டுமானாலும் பணத்தை மூட்டை கட்டிக் கொண்டு வந்து தொழில் தொடங்கலாம். பணத்தை லாரியில் ஏற்றிக் கொண்டு செல்லலாம். அல்லது போண்டியாகி அங்கேயே பனியன் கம்பெனியில் வேலைக்குச் சேரலாம். இந்தியாவின் எல்லாப் பகுதிகளில் இருந்தும் வாழ்விழந்த விவசாயிகளும், இடையர்களும், மீனவர்களும் இங்கே வருகிறார்கள். கூட்டம் கூட்டமாக திரும்பிச் செல்கின்றனர். திருப்பூர் எல்லோருக்கும் சொந்தம் யாருக்கும் சொந்தமில்லை. ஒழுங்கமைக்கப்பட்ட நகரங்கள், கிராமங்களின் சட்ட திட்டங்களும், ஆண் பெண் உறவுமுறைகளும் இங்கே குழம்பிப் போகின்றன. டாலர் சிடி.
   இந்த வாழ்க்கை முறை இப்போது தமிழகத்தின் மற்ற நகரங்களுக்கு கிராமங்களுக்கும் பரவி வருகிறது. பழனிமலை அடிவாரத்தில் முருக நதிக் கரையோரம் (ஷண்முகநதி?) உள்ள ஒரு கிராமத்தின் கதைதான் ரேகை. தங்களுக்கே உரிய விதிகளைக் கொண்ட ஜோசியக்காரர்கள் பிரதானமாக  வாழும் கிராமம் அது. வெளியூர்க்காரர்கள் இரவே வந்து தங்கி ஜோசியம் பார்த்துச் செல்கின்றனர்.
  காலம் கிராமத்தைப் புரட்டிப் போடுகிறது. உலகமயமாக்கல் வாழ்க்கையைச் சிதறடிக்கிறது. விவசாயம் மாறிப் போகிறது. தாய் மொழிக் கல்வி புறக்கணிக்கப்படுகிறது. முருகநதி சாக்கடையாக மாறிப் போகிறது. அதன் குழந்தைகள் திருப்பூருக்கும், கோவைக்கும், சென்னைக்கும் இடம் பெயர்கின்றனர். அதே நேரம் பிஹாரிகளும், ஒரியாக்காரர்களும் கரும்புத் தோட்ட வேலைக்கு பழையனூருக்கு வருகின்றனர். கம்ப்யூட்டர் ஜாதகம் வருகிறது. சாதியும், மதமும், போலீசும், பாலியல் தொழிலாளியான பரமேஸ்வரியும் கிராமத்தின் பிரிக்க முடியாத பாத்திரங்களாகிப் போகின்றனர்.

   சமூக நாடகங்கள் நடத்தும் சுப்பையா ஒரு வினோதமான ஆனால் தவிர்க்க முடியாத பாத்திரம். சற்றே துயரம் தோய்ந்த மனநிலையை உருவாக்கும் அந்தப் பாத்திரம் மிக அழகாக வார்க்கப்பட்டிருக்கிறது. அற்புதமான திறமைசாலியான சுப்பையா தனது அரசியல் நோக்கங்களுக்காக மனைவி மக்களைப் பிரிந்து கொடும் வறுமையில் உழல்கிறான். சமரசம் செய்து கொள்ள மறுத்தாலும் அவனது திறமையை தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்கின்றன. சமரசம் என்று  அறியாமலேயே செய்து கொள்ளப்படும் சமரசம் இது. ஏராளமான அறிவுஜீவிகளுக்கு நிகழ்ந்தது இதுதான். முன்னேறிச் செல்ல வழியில்லாமல், ஒருங்கிணைக்கும் கட்சி இல்லாமல் சம்பவங்களிலும், புராஜெக்ட்களிலும் வாழும் முற்போக்கு வாழ்க்கை. சமரசம் சுப்பையாவுக்கு எதையும் அள்ளிக் கொடுத்து விடுவதில்லை.
  ஒரு குறும்படம் எடுக்க வேண்டும் என்ற தீராத ஆசையில் கழிகின்றன அவனது நாட்கள்.  அவனுக்கு பதில் சோமு ஆற்றைச் சுத்தம் செய்ய முனைந்து நிற்கிறான். லட்சியங்களை அடுத்த தலைமுறை தானாக எடுத்துக் கொள்கிறது என்பதைக் காட்டும் காட்சி இது.

  சுப்பையாவுக்கு நேரெதிரான பாத்திரம் கோபால். கள்ளநோட்டு, திருப்பூரில் கடை, சென்னையில் கடை என்று கிடைத்ததைப் பிடித்துக் கொண்டு மேலேறும் எல்லாச் சமரசங்களும் செய்து கொள்ளும் பாத்திரம்.
    கொங்கு நகர்ப்புறங்களில் நாம் அன்றாடம் பார்க்க நேரிடும் எல்லோரையும் இந்த நாவலில் பார்க்கலாம். கடும் உழைப்பாளியான அமலம், கிருத்துவ போதகர், ஹஜ் செல்பவரின் நலனுக்காக பிரார்த்தனை நடத்தும் தேவாலயம் ... . . ..கேம்ப் கூலிப் பெண்கள் .. . . .

    இந்த நாவலை முழுமையும் இயல்புவாத நாவல் என்று சொல்லிவிட முடியாது. காலத்தைக் கடந்து செல்லும் போதும், உறவுகளை விவரிக்கும் போதும் சற்றே நான் லீனியர் பாணி கைக்கொள்ளப்பட்டிருக்கிறது. ஒருவிதமான மிஸ்டிகல் தன்மை கொண்ட, பழனிமலை அடிவாரத் கிராமத்துக்கும், ஜோதிடத்தை வாழ்கையாகக் கொண்ட கதை மாந்தர்களுக்கும் அந்தப் பாணி முழுவதும் பொருந்திப் போகிறது. அந்தந்தக் காலத்தில் வெளிவந்துள்ள திரைப்படங்கள் காலகட்டத்தைக் காட்ட ஆசிரியரால் ஒரு உத்தியாகப் பயன்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளது சிறப்பு.

   மொத்தத்தில் நமது காலத்தின் குறுக்கு வெட்டுத் தோற்றம் இந்த நாவல். உண்மையான பாத்திரங்களை மிக அற்புதமாக நாவலோடு இழைத்திருப்பது புனைவுக்கும், உண்மைக்கும் இடையே ஊடாடும் தன்மையை அளிக்கிறது. அதே நேரம் சட்டையில்லாத சாமியப்பன், கௌசல்யா போன்ற உண்மைப் பாத்திரங்களை மிக நேர்த்தியாக நுட்பமாகக் கையாண்டிருப்பது ஆசிரியரின் சாதுர்யம்.

   தமிழில் சமூகப் பார்வையில் புனைவிலக்கியம் எழுதுவது மிகவும் சிரமமான ஒன்றாகும். இங்கு சாதியம் பற்றி, கேம்ப் கூலி முறைபற்றி, வட நாட்டுத் தொழிளாளர்கள் பற்றி பல ஆய்வுகள் இருந்திருந்தால் எழுத்தாளர் தனது புனைவுக்கான விவரங்களை அங்கிருந்து எடுத்துக் கொள்ள முடியும். அவை இல்லாத சூழலில் எழுத்தாளரே ஆய்வாளரின் பணியையும் செய்ய வேண்டிய நிலை உள்ளது. எல்லாக் களப்பணிகளையும் அவரே செய்ய வேண்டியுள்ளது. எனவே பன்முகத்தன்மை கொண்ட, உழைப்புக்கு அஞ்சாத, ஊடுருவும் பார்வை கொண்ட ஒருவராலேயே சமூகத்தை உண்மையாகப் பிரதிபலிக்க முடியும்.
   சுப்ரபாரதி மணியன் அதை அற்புதமாகச் சாதித்திருக்கிறார்- மீண்டும் ஒருமுறை.  
- இரா.  முருகவேள் , கோவை
(  ரேகை :சுப்ரபாரதி மணியனின் புதிய நாவல் ரூ 125 . பொன்னுலகம் பதிப்பகம், திருப்பூர் )


Friday, 3 August 2007

கனவு 56 ஆம் இதழ்

கனவு 56 ஆம் இதழ் வெளிவந்துள்ளது.