முதலமைச்சர் தம்பி ஜோசப்
விஜய் கவனத்திற்கும்..
அனுப்புனர் :
சுப்ரபாரதிமணியன்
எழுத்தாளர் ..
8/2635 பாண்டியன் நகர்
திருப்பூர் 2 ( 9486101003)
பெறுநர்
போக்குவரத்து துறை அமைச்சர்
வட்டாரப் போக்குவரத்து துறை இயக்குனர்
தமிழக முதல்வர் இயக்குனர்
இயக்குனர், தமிழ் வளர்ச்சித் துறை
சென்னை
தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர்.
0
வணக்கம்
31/5/26 ஞாயிறு அன்று காலையில் சாகித்திய அகாடமி சார்பாக ”
தமிழ் நாவல்களில் எதார்த்தவாதம் “ என்ற கருத்தரங்கு தலைமையேற்று நடத்தி விட்டு
மாலை கோவையிலிருந்து
ஐந்து முப்பது மணி அளவில்
திருப்பூருக்கு திரும்பினேன்.அரசுப்பேருந்தில்
அரசுப் போக்குவரத்தில் பயணம் செய்வதற்கான விருது பெற்ற எழுத்தாளர்/தமிழ் அறிஞர் என்ற விதத்தில் எனக்கு பயன் அட்டை உள்ளது. பல ஆண்டுகளாக அதை நான் பயன்படுத்திக்
கொள்கிறேன் இந்த ஆண்டும் ஏப்ரலில் அதை புதுப்பித்து இருக்கிறேன். இந்த முறை கணினியில் அதை பதிவிட்டு
தந்திருந்தார்கள் முதல் முறையாக.
அரசு பேருந்தின்
நடத்துனர் இடம் என் பயண அட்டையை கொடுத்தபோது அவர் முதலில் இதெல்லாம் செல்லாது
என்றார் பிறகு நான் விளக்கிச் சொன்ன
போது இதன் ஜெராக்ஸ்
கொடுங்கள் என்றார். நான் பல ஆண்டுகளாக பயணம் செய்கிறேன் யாரும் ஜெராக்ஸ் கேட்பதில்லை அடையாள அட்டையில் உள்ள எண்ணைப் பதிவு செய்து கொண்டு ஜீரோ பில்லிங்
வரும் அந்த டிக்கெட்டை தருவார்கள் என்று சொன்னேன் இல்லை அவர் ஒத்துக் கொள்ள
முடியாது என்றார் ஜெராக்ஸ் தாருங்கள் பரிசீலிக்கலாம் என்றார். வழக்கமாக ஜெராக்ஸ் தருகிற அணுகுமுறை இல்லை என்று சொன்னேன்
ஒத்துக் கொள்ளவில்லை. நீங்கள் பணம் கொடுத்து டிக்கெட் வாங்குங்கள் என்று
திரும்பத் திரும்ப வற்புறுத்தினார். ஓகே நான் பணம் கொடுக்க தயாராக இருக்கிறேன். உங்கள் பெயரை சொல்லுங்கள் நாங்கள்
உங்கள் மீது புகார் சொல்லிக் கொள்கிறேன். வழக்கு பதிவிடுகிறேன்
என்று சொன்னேன். ஆனால்
அவர் பெயரை சொல்ல மறுத்துவிட்டார். அவர் சட்டையில்
இருந்த ”பேச்
“சில் அவருடைய பெயர் இருந்தது. ஆனால் என் கண் பார்வை அவ்வளவு
துல்லியமாக இல்லை .அவர் பெயரை கண்டு கொள்ள முடியவில்லை. இடையில் நான்கு பயணிகள் தூர இடைவெளி
இருந்தது. பிறகு
அவர் ஒரு நிலையில் நீங்கள் வந்து டிக்கெட் வாங்க வேண்டும்,
இல்லை என்றால் ஜெராக்ஸ் தர வேண்டும் இல்லை
என்றால் இறங்குங்கள் என்றார். பேருந்து பயணத்தில் இருப்பவர்கள் எல்லாம் வேடிக்கை பார்க்க
ஆரம்பித்தார்கள். இதுவரை
யாரும் ஜெராக்ஸ் கேட்பதில்லை உங்களுக்கு அப்படி தேவையாக இருந்தால்
திருப்பூர் புதிய பேருந்து நிலையத்தில் இறங்கி உங்களுக்கு ஜெராக்ஸ் எடுத்து
தருகிறேன் என்றேன். அவர்
அதெல்லாம் முடியாது நீங்கள் பணம் கொடுத்து டிக்கெட் வாங்குங்கள் அல்லது இறங்குங்கள்
என்று சொன்னார். இது சர்ச்சையாகி வெடித்துக்
கொண்டிருந்தது. பலர் எனக்கு ஆதரவாகப் பேசியதையும் அவர் கண்டித்தார், அவர் எதையும்
கவனிப்பதாகத்
தெரியவில்லை பணம் கொடுங்கள் இல்லை என்றால் ஜெராக்ஸ் கொடுங்கள் என்பது தான் அவர் வாதம்.. நான் பணம் கொடுக்கிறேன்.
டிக்கெட்
வாங்குகிறேன்.
உங்கள் பெயரை சொல்லுங்கள் என்றேன்
. நீங்கள் உங்கள் கைவசம்
இருக்கிற சாதனத்தில் இந்த அடையாள அட்டையின் எண்ணைப் பதிவிட்டால் ஜீரோ பில்லிங் வரும். அதை எனக்கு கொடுங்கள் அதான்
முறையானது என்றேன் அவர் ஒத்துக் கொள்ளவில்லை
நான் தமிழ் வளர்ச்சித்
துறை தமிழக அரசு போக்குவரத்திற்கு இப்படி ஒவ்வொரு எழுத்தாளர்களுக்கும் தமிழறிஞர்களுக்கும் ஆண்டுதோறும் 16, 000 ரூபாய் இதற்காகச் செலுத்துகிறது என்று நான்
கேள்விப்பட்டிருக்கிறேன். ஆகவே நீங்கள் நினைப்பது போல இது ஓசி பயணம் அல்ல எழுத்தாளர்களை கவுரவிப்பதற்காக தந்த அட்டை என்று விபரமாகச் சொன்னேன். அவர் சர்ச்சை செய்து கொண்டே
இருந்தார். ஒரு
கணத்தில் நான் பொறுமை இந்து
விட்டேன். ஏதாவது
வார்த்தைகள் மீறினால் சிரமமாகிவிடும் என்று ரொம்ப ஜாக்கிரதையாக இருந்தேன் அவர்
கத்தி ஓய்ந்தார்.
பிறகு அவர் கைவசம் இருந்த சாதனத்தில் அந்த பயண அடையாள எண்ணைப் பதிவிட்டு ஜீரோ பில்லிங் கொடுத்து நகர்ந்துவிட்டார் நான்
முன்பே இதை சொன்னேன். நீங்க கேட்கவில்லை என்றாலும் பின்னர் ஒரு பதில் எதுவும் சொல்லவில்லை.
என்
வயது 72 . மூத்தோர்களை சரியாகக் கையாளுங்கள் என்றேன். பதிலில்லை.
நான் என்னுடைய அனுபவத்தை
புகாராக அளிக்க போகிறேன் என்று சொன்னேன். யார் இடம் வேண்டுமானாலும் நீங்கள்
உங்கள் புகாரை தந்து கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டார் அந்த வண்டியின் என்று
மட்டும் நான் குறித்துக் கொண்டேன்.
தநா 39 . நா 0266 . கோவை
காந்திபுரத்தில் இருந்து மாலை 5.30 மணிக்குக் கிளம்பி 7
மணிக்கு திருப்பூர் வந்து சேர்ந்த பேருந்து அது. என் பயண
அடையாள அட்டை எண்.2012026040900430
எழுத்தாளர்கள் இதுபோன்று பயணம்
செய்யும்போது பெரும்பான்மையான நடத்துனர்கள் இது ஏதோ ஓசி பயணம் என்று
நினைக்கிறார்கள். அது
இல்லை என்று திரும்பத் திரும்ப சொல்ல வேண்டியிருக்கிறது. போக்குவரத்து துறை அதிகாரிகள்
நடத்துனர்களுக்கு சரியாக அறிவுரை கூறி இதற்காக ஜீரோ பில்லிங் தரவேண்டிய அவசியமும்
இது எழுத்தாளர்களையும் தமிழறிஞர்களையும்
கௌரவப்படுத்த ஒரு நிகழ்வு என்பதையும் அறிவுறுத்தலாக சொல்ல வேண்டும்.அவர்களின்
அணுகுமுறை மோசமாக இருக்கிறது
இதுபோல் தமிழறிஞர்களை
இடையில் பேருந்தை விட்டு
இறக்கியும் அல்லது அவர்கள் கேட்ட நிறுத்தத்தில் நிறுத்தாமல் வேறு இடத்தில் திறுத்தியதாலும் முன்னர் தொடரப்பட்ட வழக்குகளில் பல ஆயிரக்கணக்கான ரூபாய்க்கு நஷ்ட ஈட்டை அரசு போக்குவரத்து துறை அளித்திருக்கிறது என்பதை
நானும் அறிந்திருக்கிறேன்.
எனவே போக்குவரத்து துறை
சார்ந்த அதிகாரிகள் நடத்துனர்களுக்கு
இதுசார்ந்து சரியான அறிவுரைகளையும்
விபரங்களையும் தர
வேண்டும் என்பதைத்
தெரிவித்துக் கொள்கிறேன்
இப்படிக்கு
சுப்ரபாரதி மணியன் எழுத்தாளர்
(ரா.ப.சுப்ரமணியன்)
1/6/26
Subrabharathimanian, Tiruppur
0 சுப்ர பாரதி
மணியன் : 25/10/1955 . /
MSc ( Maths)
வெளியாகி உள்ள
நூல்கள் :
135 நூல்கள்
/ 27 நாவல்கள் / 19 சிறுகதை
தொகுப்புகள் /
3 குறுநாவல்கள் தொகுப்புகள் / 25 கட்டுரைத்
தொகுப்புகள்/, வெளிநாட்டு பயண
அனுபவம் நூல்கள் மற்றும் திரைப்பட நூல்கள்.( 100வது நூல் : சிலுவை நாவல் 1000 பக்கங்கள். ரூ1200 )
பரிசுகள் :
0 சிறந்த
சிறுகதைக்கான இந்திய ஜனாதிபதி வழங்கிய கதா பரிசு
0 ”சாயத்திரை “ நாவலுக்காக தமிழக
அரசின் சிறந்த நாவலுக்கான பரிசு 1998
0 தமிழக அரசின்
தமிழ்ச்செம்மல் விருது 2016
0 தமிழக அரசின் மொழி பெயர்ப்பாளர் விருது 2022
0 குமுதம் ஏர்
இந்தியா நடத்திய இலக்கியப் போட்டியில் சிறந்த குறுநாவலுக்கான பரிசு
பெற்று இங்கிலாந்து ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்று பயணம்
0 எழுத்து
அறக்கட்டளையின் சிறந்த நாவல் விருது ஒரு லட்சம் ரூபாய் 2021
0 சார்ஜா புத்தகக் கண்காட்சியின்
புக்கிஷ் விருது 2021
0 கோவை கஸ்தூரி
சீனிவாச அறக்கட்டளையின் சிறந்த நாவலுக்கான பரிசு ” பிணங்களின் முகங்கள்” நாவலுக்காக
0 ஜெயந்தன் நினைவு
பரிசு சிறந்த நாவலுக்காக நீர் துளிகள் 0 சின்னப்ப பாரதி இலக்கிய விருது
0 திசையட்டும்
நல்லி மொழிபெயர்ப்பு விருது
எஸ் ஆர் வி திருச்சி மற்றும் பாவை ராசிபுரம் நிறுவனங்களின்
இலக்கிய விருதுகள் 2022., 2023
0
தமிழக அரசின் மொழிபெயர்ப்பாளர் விருது ரூபாய் 2 லட்சம் தொகையுடன்
1
0 சென்னை தமிழ்ப்பேராயம் புதுமைப்பித்தன் விருது சிலுவை
நாவலுக்காக ரூபாய் 1 லட்சம் தொகையுடன்
0 பொறுப்பு:
0 சாகித்ய அகடமி ஆலோசனைக்
குழு உறுப்பினர் 2008 - 12
0 தென்னிந்திய திரைப்படசங்கங்களின்
கூட்டமைப்ப்பு பிராந்திய குழு உறுப்பினர்
மொழிபெயர்ப்பு:
0 ” சாயத்திரை “ நாவல்
ஆங்கிலத்திலும், ஹிந்தியில்
மலையாளம் கன்னடம் வங்காளத்திலும் மொழி பெயர்ப்பு உள்ளது
0 ஹிந்தியில் ஐந்து நாவல்களும்
மலையாளத்தில் ஐந்து
நாவல்களும் மொழிபெயர்ப்பாகி வெளியாகி உள்ளன
ஆங்கிலத்தில் 20 நூல்கள் வெளியாகி
இருக்கின்றன மொழிபெயர்ப்பில் பல இந்திய மொழிகளிலும்.
0 படைப்புகள் பல
பல்கலைக்கிடங்களில் பாடநூல் உள்ளன 0 மலையாளம்
தெலுங்கு ஹிந்தி ஆங்கிலம் மற்றும் இந்திய மற்றும் ஹங்கேரியன் மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன
சுற்றுச்சூழல்
நூல்கள் :
நாவல்கள் :
0 சாயத் திரை, நீர்த்ர்த்துளி, புத்துமண்
0 கட்டுரைத்
தொகுப்புகள் :
தண்ணீர் யுத்தம், சூழல் அறம், நீர்ப்பாலை, மேக வெடிப்பு, சிவப்புப்பட்டியல், மறைந்து வரும் மரங்கள் , மூன்றாம்
உலகப்போர் , பூமிக்கு மனிதன்
தலைவனா, பூமிக்குத் தீ வைத்தோம், பசுமை அரசியல் உட்பட 12 கட்டுரைத்
தொகுப்புகள்
இதழியல் :
0 கனவு இலக்கியக்
காலாண்டு இதழை 38 ஆண்டுகளாக நடத்தி
வருகிறார்.
0 கனவு திரைப்பட
இயக்கம்,,
0 தாய் தமிழ் பள்ளி
பாண்டியன் நகர் திருப்பூர் உடன் இணைந்து செயல்பாடு 30 ஆண்டுகளாய்.
திரைநாவல்கள் :
0 திரைக்கதை
நூல்கள் 9 வெளியிட்டுள்ளார் . அவற்றில் 70 திரைக்கதைகள்
உள்ளன.
திரைநாவல் என்ற புதிய
நாவல் முயற்சிகளில் 10 நாவல்களை எழுதியுள்ளார்.
குறும்படங்கள்:
0
சுப்ரபாரதி
மணியன் இயக்கிய
குறும்படம் ” நாணல் “( அவரின்
பாதுகாப்பு என்ற ஆனந்தவிகடன் சிறுகதை )
இவரின் கதைகள் திருவிழா , சோத்துப்பொட்டலம், சுமங்கலி மாற்றம்
உட்பட 10 குறும்படங்களாக வெளியாகி இருக்கிறன..
” இன்று நேற்று நாளை “, அயலான் “ இயக்குனர் ஆர். இரவிக்குமர்ர் இயக்கிய சுமங்கலி உட்பட பல இயக்குனர்களின்
இயக்கத்தில் குறும்படங்கள் வெளியாகியுள்ளன.
வெளிநாட்டு பயணங்கள்:
0 : இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, சிங்கப்பூர், மலேசியா
இந்தோனேசியா, தாய்லாந்து, பங்களாதேஷ், இலங்கை, துபாய்
சார்ஜா , இஸ்ரேல்
பாலஸ்தீனம், ஜோர்டான், வியட்நாம், இலங்கை, ,எகிப்து
No comments:
Post a Comment