Tuesday, 2 June 2026

 

சென்னை 29வது சமூக நீதி திரைப்பட விழாவில்..

சுப்ரபாரதி மணியன்

இந்தத் திரைப்பட விழாவில் துவக்க விழா படமாக ஃபர்ஸ்ட் ஃபிலிம் என்ற படம் திரையிடப்பட்டது .15/4/26

இந்த படம் சென்ற மாதம் திருப்பூர் டாப் நூலகத்தில் நடந்த பெண்கள் தினத்திரைப்பட விழாவில் முதல் படமாக திரையிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடப்பட்டது..

0

29ஆவது சமூக நீதி திரைப்பட விழா சென்னையில் பெரியார் திடல் அன்னையின் மணியம்மையார் திடலில் அரங்கில் 15/4/26 அன்று ஆரம்பித்தது. ஐந்து நாட்கள் இந்த சமூக நீதி திரைப்பட விழா நடக்கிறது இதில் நூற்றுக்கும் மேற்பட்ட குறும்படங்கள் ஆவணப்படங்கள் திரையிடப்படுகின்றன

இந்த விழாவை எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் துவக்கி வைத்தார் .மறுபக்கம் அமைப்பின் செயல் பாடுகள் கடந்த முப்பது ஆண்டுகளாக மாற்று கலாச்சார நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இருப்பதைக் குறிப்பிட்டார்.

இயக்குனர் ஆர்பி அமுதன் அவர்கள் வரவேற்று பேசினார்

இந்த திரைப்பட விழாவில் தான் இதுவரை இல்லாத அளவுக்கு இந்திய திரைப்படங்கள் அதிக அளவில் திரையிடப்படுகின்றன .அதுவும் கணிசமாக தமிழ் திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன

இந்த ஆண்டு சிறந்த ஆவணப்படம் மற்றும் குறும்படத்திற்கு விருது வழங்கப்படுகிறது

முதன் முயற்சியாக திரைப்படங்களை எடுத்து இருப்பவர்களின் படங்களும் நிறைய இடம்பெறுகின்றன அவர்களை முதன்மைப்படுத்தும் விதமாக இதில் திரைப்படங்கள் திரையிடல் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் சமூக நீதி சார்ந்த பிரச்சினைகளும் மனித உரிமை கேள்விகளும் நிறைய எழுப்பப்பட்டு வரும் நிலையில் அதற்கான களங்கள் குறும்பட ஆவணப்படங்களில் இடம் பெற்று இருக்கின்றன என்பது ஆரோக்கியமாகப்படுகிறது .இந்த திரைப்பட விழாவில் சமூக நீதி கூறும் மனிதர்கள் அவர்கள் நடவடிக்கைகள் அவர்கள் சார்ந்த தருணங்கள் கொண்ட படங்கள் அதிக அளவில் இடம் பெறுகின்றன என்று குறிப்பிட்டார்

நேற்று முதல் படமாக தி ஃபர்ஸ்ட் ஃபிலிம் என்ற படம் இடம்பெற்றது இந்த படத்தில் 60 ஆண்டுகளுக்கு முன்னால் இந்திய சூழலில் ஒரு பெண் ஒரு திரைப்படம் பார்ப்பதற்காக எடுத்துக் கொள்ளும் முயற்சிகள் எவ்வளவு சிரமமாக இருந்தன அது அவர்களின் விடுதலையின் ஒரு படியாக எப்படி இருந்தது என்பதை அந்த படம் விளக்கியது தீண்டாத வசந்தம் போன்ற படங்கள் இந்தியாவில் நடந்து வரும் ஆவண கொலைகள் பற்றிய மையமாக இருந்தது .மறையாத நிழல் என்ற பாரு பெண்மணியின் படம் பாலியல் தொந்தரவு சார்ந்த ஒரு பெண்ணின் நிகழ்வு வாழ்க்கை முழுவதும் தொடர்வது பற்றி இருந்தது மற்றும் விளிம்பு நிலை சார்ந்த மக்கள் பற்றிய படங்களும் மொழி சிறுபான்மையினர் பற்றிய படங்களும் குறிப்பிடத்தக்கதாக இருந்தன

டெய்லி பிரட் என்ற காஷ்மீர் படத்தில் காணாமல் போன காஷ்மீர் ஆண்களைப் பற்றிய ஒரு சித்திரம் கனத்த மவுனத்துடன் பதிவாகி இருந்தது .மற்றவர்கள் என்ற தலைப்பில் மூன்றாம் பாலினத்தவரும் அவர்களை சார்ந்தவரும் வாழ்க்கையை வெளிப்படுத்திய படமாக இருந்தது

 

 

சமூக நீதி என்றாலே ஆவணக்கொலைகள் ஞாபகம் வருவது வழக்கம். நாக்கை அறுத்தல், கழுத்தை அறுத்து ரயில் தண்டவாளத்தில் பிணஹ்ட்தைப் போடுதல் , அதன் பின்னணியிலான தாழ்த்தப்பட்டவர்கன் இம்சைகள் என்பது பல படங்களில் பொதுவாக அமைந்திருந்தது.

 

 

 

தீண்டாத வசந்தம் போன்ற படங்கள் இந்தியாவில் நடந்து வரும் ஆவண கொலைகள் பற்றிய மையமாக இருந்தது .மறையாத நிழல் என்ற பாரு பெண்மணியின் படம் பாலியல் தொந்தரவு சார்ந்த ஒரு பெண்ணின் நிகழ்வு வாழ்க்கை முழுவதும் தொடர்வது பற்றி இருந்தது மற்றும் விளிம்பு நிலை சார்ந்த மக்கள் பற்றிய படங்களும் மொழி சிறுபான்மையினர் பற்றிய படங்களும் குறிப்பிடத்தக்கதாக இருந்தன

டெய்லி பிரட் என்ற காஷ்மீர் படத்தில் காணாமல் போன காஷ்மீர் ஆண்களைப் பற்றிய ஒரு சித்திரம் கனத்த மவுனத்துடன் பதிவாகி இருந்தது .மற்றவர்கள் என்ற தலைப்பில் மூன்றாம் பாலினத்தவரும் அவர்களை சார்ந்தவரும் வாழ்க்கையை வெளிப்படுத்திய படமாக இருந்தது

 

 

சென்னை சமூக நீதி திரைப்பட விழாவில் சங்கீதா மனிஷா என்ற எழுபத்தோரு நிமிட ஆவணப்படம் சிறப்பாக அமைந்தது

தமிழ்நாட்டில் ஒரு பெண் கர்ப்பமானதிலிருந்து அவருடைய பிரசவம் வரைக்கும் கண்காணித்து அவளுக்கு ஊட்டமாக சத்து உணவு.. மருந்து தந்து கொண்டிருக்கிறானது தமிழக அரசின் செயல்பாடுகளைப் போல வேறு மாநிலங்களில் அமையவில்லை என்று வல்லுன்னர்கள் சொல்லுகிறார்கள், வட இந்தியாவில் இருக்கிற பகுதி மக்களுக்கு கல்வியும் மருத்துவமும் இந்த வகையில் சரியாக கிடைப்பதில்லை.

சத்து குறைபாடு உள்ள இரண்டு குழந்தைகளை எடுத்துக்கொண்டு சமூக பணியாளர்கள் சத்து மருத்துவர்கள் உள்ள மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை அளிக்கிறார்கள். அவர்களைத்தொடர்கிறார்கள். அவர்களுடைய வாழ்நிலை எப்படி இருக்கிறது என்பதை சொல்கிறது

30 கிலோமீட்டர் தள்ளி இருக்கிற ரேஷன் கடைக்கு போக அவர்களால் முடிவதில்லை 3 கிலோமீட்டர் தள்ளி இருக்கிற அங்கன்வாடிக்கு போக அவர்களின் குழந்தைகளுக்கு வாய்க்கவில்லை குழந்தைகளுக்கு சுகாதாரமாக உணவு கிடைப்பதில்லை ஆண்களின் சம்பாத்தியம் போதவில்லை காட்டில் விளைகிற பொருட்கள் மட்டும் தான் அவர்களுக்கு உணவுக்கு சரியாகிறது

வட இந்தியாவில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுடைய நிலைமையை சரியாக காட்டிய படம் ..தமிழகம்.. தென் மாநிலங்களும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் வளர்ச்சியில் அரசு அக்கறை காட்டுவதை பல நிபுணர்கள் தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள் அதை மனதில் வைத்துக் கொள் என்கிறது இப்படம்.

ஒரு தன்னாரக் குழுவைச் சார்ந்தவர்களே இந்த படத்தை எடுக்கிறார்கள் கேமராவிலிருந்து அனைத்தையும் அவர்களை கையாளுகிறார்கள் என்பதால் இந்த படத்தின் திரை மொழி விசேஷமாக இருக்கிறது மக்களின் மொழியாக இருக்கிறது ..வெகுஜன திரை மொழி இந்த படத்தில் தவிர்க்கப்பட உதாரணம் இப்படம்.

சென்னை சமூக நீதி திரைப்பட விழாவில் மூன்றாம் பாலினம் திருநங்கைகள் பற்றி இரண்டு படங்கள் இருந்தன அதில் ஒன்று அரளி என்ற படம்

பிரியாணி மாஸ்டர் என்ற படத்தில் அன்னூர் பகுதி சார்ந்தவர் திருநங்கை அவர்கள் சமையல் கற்றுக்கொண்டு சமையல் வேலையில் பெரிய விற்பனராக இருந்து பலருக்கு வேலை தருகிறார்

அரளிப் பட்டத்தில் திருநங்கைகள் நாட்டுப்புற கலைகளில் செலுத்தி வரும் ஆர்வம்.. நாடக பயிற்சிகளும் நாடக அரங்கேற்றங்களும் என்று இருந்தது சிறப்பாக அமைந்தவை இந்த படங்கள்

 

கூப்புக்காடு பாரதி புத்தகம் வெளியிட்டிருக்கிற ஒரு நாவல் மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் வந்தது படித்திருக்கிறேன்

இந்த நாவல் உடைய முக்கியமான அம்சங்களை கொண்டு கூப்புக்காடு என்ற பெயரில் ஒரு மணி நேரத்துக்கு மேலான ஒரு ஆவணப்படுத்தி எடுத்து இருக்கிறார்கள் அதில் நாவலாசிரியர் அரா வால்பாறை பகுதி மக்களுடைய வாழ்க்கை பற்றி கூறுகிறார் கூப்புகாடு நாவலில் கொடுத்த தகவல்களை சொல்கிறார்

வால்பாறை தேயிலைத்தோட்ட தொழிலாளர்கள் அவர்கள் இன்றைய நிலை வட மாநில தொழிலாளர்கள் வந்து குவிகிற நிலை ..பணி நீக்கத்திற்கு பிறகு வீடோ பெரிய பணமோ இல்லாமல் தத்தளிக்கும்

தொழிலாளர்கள் தொழிற்சங்கங்கள் முதலாளிகளுக்கு சாதகமாக இருக்கும் நிலைமை இவற்றையெல்லாம் விரிவாக சொல்கிறார் ஒரு குறிப்பிட்ட தக்க படமாக்கு இருந்தது

நாவலில் சில கதை அம்சங்கள் இருந்தன அது கூப்புக்காடு பகுதியில் யானைகள் தொந்தரவு ..மனைவி வீட்டில் இருக்க இரவுகாவலுக்கு செல்லும் ஆணின்அனுபவங்கள் ஆனால் படத்தில் அவையெல்லாம் இல்லாமல் இருக்கிறது.

 

 

இரை

கைபேசியில் எடுக்கப்பட்ட ஒரு படம்

போர் சூழலில் மாட்டிக் கொண்ட ஒருவன் வாழ்க்கையில் அநிதித்யம் பற்றி பேசுகிறார் மனதை தொட்டு பலரைக்கவர்ந்தது

சென்னை சமூக நீதி திரைப்பட விழாவில்

 

சென்னை சமூக நீதி திரைப்பட விழாவில் ஒத்தடி குறும்படம்

மயானத்தில் வெட்டியான் மீது செலுத்தப்படும் வசவு. அவன் இடையில் வெளியேறுகிறான் பின் தொடர்ந்து வரும் ஆதிக்கஷ ஆணை எதிர்க்கிறான்

இதே வகையில் ஒரு சனி பிணம் .சனி பிணத்திற்கு துணையாக இருக்கும் சேவலை தேடும் துரத்தி ஓடும் ஒரு சிறுவன் ஒரு நிலையில் அதை எதிர்த்து இவனைப் பார்க்கிறது இரண்டையும் ஒன்றாக்கி ஒரு படிவமாக தந்திருக்கிறார் இயக்குனர்

எதிர்ப்பு குணம்

நல்ல பாராட்டை பெற்றது

 

ஆந்திர சமூகப் போராளி பி எஸ் கிருஷ்ன்ன் அவர்கள் பற்றிய போராட்டம்  நூல் ஞாபகம் இருக்கிறதா கோவை வழக்கறிஞர் தமிழ்நாடு போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் மு.ஆனந்தன் அவர்கள் மொழி பெயர்த்தது.. இந்த நூலை அடிப்படையாகக் கொண்டு ஒரு ஆவணப்படம் திரையிடப்பட்டது மிக சிறந்த ஒரு ஆவணம்

சென்னை சமூக நீதி திரைப்பட விழாவில்

 

 

 

5 நாள் நிகழ்வில் 30க்கும் மேற்பட்ட படைப்பாளிகள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். நிறைவு நாள் நிகழ்ச்சியில் பகல் உணவு மாட்டுக்கறி பிரியாணி வழங்கப்பட்டது. மாட்டுக்கறி பிரியாணி இந்தியாவில் வழங்கப்படும் ஒரே ஒரு திரைப்பட விழா இதுதான்!

விழா நிறைவுப்பகுதியில் விழாவில் உழைத்த அனைவருக்கும் பயனாடை வழங்கி சிறப்பு செய்யப்பட்டது. நிறைவாக விருதுகள் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டது. நடுவர் குழுவில் எழுத்தாளர் சுப்ரபாரதி மணியன், இயக்குநர் ஆர்பி அமுதன்,நான் உட்பட மூவர் இடம் பெற்றோம்.

விருது பெற்ற படங்களின் பட்டியல்:

29th Social Justice Film Festival 2026

Best Documentry Winner:

Sangeeta Manisha

Direction: Shobhit Jain.

Documentry / Jury Mention:

Naan Revathi

Direction: P Abhijith.

Documentry / Certificate of Merit:

Dare to Dream

Direction: Ranu Ghosh.

Best Short Film Winner:

The Daily Bread

Direction: Anil Kumar Anand

Short Film / Jury Mention

The First Film

Direction: Piyush Thakur.

Short Film / Certificate of Merit:

Maithaanam

Direction: Mathu

Best Student Film:

Sudar Katru

Direction: Anirudh Unnikrishnan.

Student Film / Jury Mention

Maraiya Nizhal

Direction: Paro Salil.

Student Film / Certificate of Merit:

Zindagi Ki Chaal

Direction: Anjali Raghwani.

 

 

 

 

No comments: