Tuesday, 2 June 2026

 

திருப்பூரில் இடம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கான வெளியும்

அவர்களின் குழந்தைகளின் கல்வியும் குறித்த இரு நாட்கள் கருத்தரங்கம்,

வெளிமாநில பிரதிநிதிகள் முப்பது பேரும் நானும் கலந்து கொண்டோம்..

-    சுப்ரபாரதிமணியன்

 

 

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் இணைச் செயலாளராகவும் திருப்பூர் தொழில் பங்களிப்போர் கூட்டமைப்பின் -இன் ஒருங்கிணைப்பாளர் என்கின்ற பொறுப்பில், SAVE Tiruppur ஏற்பாடு செய்த புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளின் கல்வி உரிமைகள் குறித்த தேசிய கருத்தரங்கில் (National Workshop) முக்கிய உரையாற்றும் வாய்ப்பு கிடைத்தது.

கல்வி என்பது ஒவ்வொரு குழந்தைக்கும் அடிப்படை உரிமையாக இருந்தாலும், தரமான கல்வியை பெறுவதில் உள்ள குறைபாடுகள் காரணமாக புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகள் இன்னும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். இந்நிகழ்வில், அவர்களின் கல்வி சேர்க்கையைத் தடுக்கும் கொள்கை குறைபாடுகள் மற்றும் கட்டமைப்பு சிக்கல்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்தேன். மேலும், இந்த சவால்களை சமாளிக்க TEA மேற்கொண்டு வரும் முயற்சிகளையும் பகிர்ந்துகொண்டேன்.

சில முன்னேற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும், ஒவ்வொரு குழந்தைக்கும் சமமான கல்வி வாய்ப்புகளை உறுதி செய்ய இன்னும் நீண்ட பயணம் செல்ல வேண்டியுள்ளது.

-குமார் துரைசாமி

 

 

No comments: