Tuesday, 2 June 2026

 

சு. வேணுகோபால்

 

சுப்ரபாதி மணியனின் கலைப்பயண சரிவுகள் தத்தளிப்பற்று அமைதி கொண்டவை. வெற்றிகள்  கொண்டவை . தனக்கு வந்த செய்தியை உடனே எழுதி தீர்த்து விடுவது என்ற தொனி வகை சுடுகாட்டு பூங்கா எல்லோருக்குமான நேசம்,  கதைகளில் நிகழ்ந்திருக்கிறது படைப்பு மனம் ஒரு விடயத்தை அனுபவத்தை தெரிந்து கொள்கிற போது அதே விதமான அனுபவப் படைப்பாக்கத்தில் ஏற்கனவே பதிவு பெற்றிருக்கும் பட்சத்தில் அந்தச் சாதனையை முறியடிக்கிற விதமாய் அமைந்துவிடுகிற போது தான் படைப்பின் சற்று கெட்டியாக மனதிற்கு தென்படுகிறது. நேற்றைய படைப்பிற்கு சமாந்தத்தில் இன்றைய படைப்பு இருப்பதாய் பிறந்தாலும் முந்தைய படிப்பிற்கே மனம் பெரிய  கணம் பெறும் முன் தலைமுறையினர் தொடாதவற்றை தொடுகிற புள்ளிகள் முக்கியம்  பெறுகின்றன.எதிர்ப்பதியம் கதையில் கர்நாடகா நீர் பிரச்சனையில் அகதியாக வருபவன் தமிழ்நாட்டிலும் அகதியாய் பார்க்கப்படுகிற அவலத்தை சொல்கிறது. இந்த  சம்பவம் மணியனுக்கு நெருக்கமாக தேர்ந்தெடுத்திருக்கலாம். பொய்யான விஷயம் படைப்பாளியின் ஆளுமையில் ஜீவத்துடிப்போடு நிஜத்தன்மை பெற்று விடுகிறது. நிஜமான அனுபவம் படைப்பாளியின் பலவீனத்தால் வசியப்பட்டு செயற்கை தன்மை கொண்டு விடுகிறது. விஷயம் பொய்யா நிஜமா என்பதை விட படைப்பாளி நம்பும் விதம் படைத்திருக்கிறானா என்பதில் தான் கலையின் ஆற்றல் இருக்கிறது. எதிர்ப்பதியம் ஒரு நிலையில் நின்று விட்ட பொழுது அதை காவிரி தகராறு பற்றி சொல்லும் முற்றுகை தலை சிறந்த கதையாக இங்கு இணையாக வைக்கலாம். ஒரு சமூகத்தின் கனவு  முழு வீச்சில் இந்த சின்னச்சாமி என்ற பாத்திரத்திற்குள் அரங்கேறி மெருகேறுவதை சொல்ல வேண்டும் மனதில் தோன்றும் ஒரு யோசனையை சட்டென கதையென்று எழுதி பார்த்தால் என்ன என்று நமக்கு தோன்றும். கூண்டு வெளியும், வாழ்வின் தீர்வு, நாதம் இப்படிப்பட்டவை கதைகளோ மண்ணும் கலந்து இருக்கின்றன இந்த மூல தயாரிப்பு அளவு தூரம் மனதை கேட்பதில்லை, தொடுகிற போது மாலை நூல் தெரியாமல் காணப்படும்.  நடுவில் நூல் தெரிவது சங்கடம் அளிக்கிறது பிரச்சனைகளில் உக்கிரம் அல்லது வாழ்வின் சிக்கல் நம்மை பலவிதமாக வந்து படியவில்லை அதுல பாதாளத்துக்குள் பல எதிரொலிகளை எழுப்பாமல் நின்று விட்டன. சொல்லும் முறையில் பலவீனமான கதை கண்ணாமூச்சிகளும்..  காலங்காமாக அல்லது தலைமுறை தலைமுறையாய் வரும் தப்பித்தலை டவுசர் காலத்தில் நின்று வேஷ்டி காலம் வரை சிறுகதைக்குரிய பிம்பமாக இல்லாமல் ஆகி விடுகிறது .ஒரு விளக்க உரை முற்படும்போது படைப்பு சிதறலாக  மாறிவிடுகிறது.  சுழல், வழித்துணைகள், குவியல், தருணம் போன்ற கதைகளில் நாம் வாழ்ந்த பதிவை சப்தம் இல்லாமல் பதித்து வைக்கிறார். கனவு சிறிய வட்டத்துக்குள் தள்ளிக் கொண்டிருக்கும் நிர்பந்தத்தின் மீது விமர்சனம் செய்யாமல் பொருளாதாரத்தால் சிக்கின சிங்கம் அடித்தட்டு மக்களின்  வாழ்க்கையை பதிவு செய்திருக்கிற அவசிமான கதைகள் முற்றுகைப், பிணவண்டி, பறவைகள் நதிக்கரைகளும், நிலை போன்ற கதைகளில் பொதுவாழ்வின் விழிப்பினோடு அதிர்ந்து கொள்ளும் விதமாக படைப்பாளி தனக்குள் இறங்கிக் கொள்ளும் கணங்களை காண முடிகிறது       பூரண கலவை முடிஞ்சு  குளிச்சிட்டு வந்து நிக்கிற பொண்ணோட உடம்பு வாசம்தான்  வாழ்க்கையில் மாறும் வழித்துணையில் விழுந்த வரி நிலை என்ற வரி எழுதாமல் எழுதப்பட்டு இருப்பதையும் உணர முடிகிறது. உன்னை கொல்லனும் போல இருக்கு என்று தோணிக்காரனை நகரத்து வாழ்கிறவன் சொல்கிற போது நதிக்கரைகளும் கான்கிரீட் வனங்களும் இந்த இயற்கையை தின்று நிற்கிற நகரத்தின் கோரப்பற்களும் அந்த வரிகளில் தெரிகின்றன . விமர்சிக்கவும் நேசம் கொள்ளவும் ஆன தொகுப்புகள் இவை

 

 சு. வேணுகோபால்

 

சுப்ரபாதி மணியனின் நாதம்,  வழித் துணைகள் சிறுகதை நூல்களையும் முன்வைத்து;;

 

 

No comments: