உஷா தீபனின் பாணி
சுப்ரபாரதி
மணியன்
நண்பர் உஷா தீபன் அவர்கள்
முன்னரே கேட்டபோது அவரின் முதல் நூலுக்கு நான் முன்னுரை எழுதியதை ஞாபகப்படுத்தி உள்ளார்.. எனக்கு ஞாபகம் இல்லை. ஆனாலும் இந்த நூலுக்கு முன்னுரை எழுதுவது அவரின் தொடர்ந்த செயல்பாட்டை பாராட்டுவதற்கான ஒரு வாய்ப்பாக்க் கருதுகிறேன்.
மதுரையிலிருந்து
சென்னைக்கு அவர் குடிபெயர்ந்த பின்னால் ஒரு பெரு நகரத்தின் நிலவியலையும்
வாழ்வியலையும் தன் கதைகளுக்குள் கொண்டு வந்தார். பெருநகர மக்களுடைய வாழ்க்கையில்
எத்தனை எத்தனை சம்பவங்கள். அதிர்வுகள், அதிர்ச்சிகள், சந்தோஷங்கள் இதையெல்லாம் எழுதினார் அப்படித்தான் இந்த தொகுப்பில் வருகிற கழிவுநீர்
சார்ந்த பிரச்சனைக்கு முடிவு காண பலர் திகைப்பதும் அதற்காக ஒருவன் வந்திருப்பதும்
அவனைப் பார்த்து இன்னும் திகைப்பு
ஏற்படுவதும் கூட.
இப்படி பெருநகரை
சார்ந்த மக்களை எல்லாம் தொடர்ந்து காட்டிக் கொண்டே இருக்கிறார். இந்த விளிம்புநிலை மக்கள் ஏகமாய் நகரங்களில் நிறைந்து
இருக்கிறார்கள். இவர்கள்
உஷா தீபன் பார்வைக்கு பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். எனவே அவர்களைப் பற்றியெல்லாம் எழுதிக் கொண்டே இருக்கிறார்.
இன்னொரு புறம்
இவரின் அலுவலக கதைகள். என் 35 ஆண்டுகள்
தொலைதொடர்பு துறையின் அனுபவத்தை நான்கைந்து கதைகளாகத்தான் எழுதி இருக்கிறேன். ஆனால் அலுவலகத்தை மையமாகக் கொண்டு
நூற்றுக்கணக்கான கதைகளை எழுதி இருக்கிறார் என்று தோன்றுகிறது. அலுவலகம் என்றால் ஒரு பத்து இருபது பேர் இருக்கிற இடம். பெரும்பாலும் எழுத்தர்ளராக இருக்கிறார்கள் இவர்கள்
ஒவ்வொருவருக்குள்ளும்
இருக்கிற மனித சுபாவங்களும் அவர்களின் வாழ்க்கை பற்றியும் தொடர்ந்து கவனித்துக் கொண்டே
இருக்கிறார்.
இப்படித்தான் முதியோர் இல்லப் பிரச்சனைகளை
பற்றியும் அதையெல்லாம் அந்த மனிதர்கள்
எத்தனை விதமாக இருக்கிறார்கள் என்பதை
காட்டுகிறார்.
ஒரு ரயில் பயணத்தில் ஒரு சுண்டல் வியாபாரிக்கு ஏற்படுகிற பயணம் அவர் சந்திக்கிற
பல்வேறு வியாபாரிகள், பல்வேறு மனிதர்கள்… இவற்றையெல்லாம் படிக்கிற போது அந்த ரயில் பயணத்தில் ஒரு
நாள் கூட நாம் இல்லாமல் போய் விட்டோமே என்ற வருத்தம் ஏற்படுகிறது. அதிலும் புத்தகங்கள் படித்து தன்னை
தேற்றிக் கொள்கிற சில மனிதர்களையும் காட்டுவது அபூர்வமாக இருக்கிறது.
நிர்வாகம் என்பது
ரகசிய கிடங்கு என்ற ஒரு கதையில் இவர் எழுதி இருக்கிறார் அப்படித்தான் அரசு
நிர்வாகம் என்பது ரகசிய கிடங்காக
இருக்கிறது என்பதை அந்த கிடங்கில் போய் தோண்டி தோண்டி பல கதைகள் எழுதி இருக்கிறார். இதைத் தாண்டி தொழிற்சங்க மனிதர்கள்
சார்ந்த அனுபவங்கள், சரித்திரம்
நிகழ்காலம் இணைந்த கற்பனை இவை எல்லாம் அவருக்கு சுலபமாக வந்து விடுகின்றன
சாமி கும்பிட வந்தா
அந்த வேலையைத்தான் பார்க்கணும் என்று அவர் குறிப்பிடுகிற
மாதிரி மனிதர்களை கவனிக்கிற வேலையைத்தான் அவர் சுலபமாக செய்கிறார். இதில் வருகிற சத்யாவை ஒருவன்
தேடுகிறான்.
சத்தியங்களையும் தேடுகிறான் வாழ்க்கையின் வெவ்வேறு சாத்தியங்களையும் கண்டடைகிறான்
இந்த சாத்தியங்களை கண்டறிகிற மனித இயல்பை சுட்டிக் காட்டுவது உஷா தீபனின் பாணியாக இருக்கிறது
உரைநடையில் ஒவ்வொருவருக்கும் ஒரு பாணி இருக்கும் ஆனால் பொது பாணி, பொது உரைநடை என்பது பலருக்கு நிறைய எழுத
வாய்ப்பைத் தரும். அப்படித்தான் வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டு நிறைய எழுதி தமிழ் இலக்கிய உலகத்திற்கு தன்
பங்களிப்பை செய்திருக்கிறார் நண்பர்..
அவருக்கு வாழ்த்துக்கள்
சுப்ரபாரதி மணியன், திருப்பூர்
No comments:
Post a Comment